மதுபானம் திடீர் விலையேற்றம் : டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு
மதுபானம் திடீர் விலையேற்றம் : டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 11, 2011 08:15 PM
திருநெல்வேலி: டாஸ்மாக் மதுபான கடைகளில் திடீர் விலையேற்றத்தை மதியம் அமல்படுத்தியதால் விற்பனையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் முதல் சரக்குகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குவாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 10 ரூபாயும், முழு பாட்டிலுக்கு 20 ரூபாய் வீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக விலையேற்றத்தை இரவு 10 மணிக்கு அறிவித்து மறுநாள் காலையில் இருந்து புதிய விலை அமல்படுத்தப்படும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் புதிய விலை பிற்பகல் 4 மணிக்குபேக்ஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. காலையில் ஏற்கனவே விற்ற சரக்குகளுக்கும் புதிய விலையிலேயே கணக்கு தரும்படி மாவட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 500 பாட்டில் விற்பனை செய்து, புதிய விலையில் கணக்கு கொடுத்தால் 2 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றார்கள். இதனால் இரவில்விலையேற்றத்தை விடவும் அதிக விலைக்கு சரக்கு விற்கப்பட்டது. இதனால் குடிமக்கள் அவதியுற்றனர்.டாஸ்மாக் அதிகாரிகள் விலையேற்றத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஊழியர்கள், குடிமக்கள் என இரு தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகினர்.