ADDED : மே 01, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. வாரத்தில் அனைத்து நாட்களும் செயல்படும், இந்த கடைகளுக்கு, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை.
அதன்படி, மே தினத்தை முன்னிட்டு, இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மதுக்கடைகள் மற்றும் அந்த கடைகளில் செயல்படும் மதுக்கூடங்களை நேற்று இரவு, 10:00 மணிக்கு பூட்டி, 'சீல்' வைக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது.
இன்று முறைகேடாக மது விற்றால் போலீசில் புகார் அளித்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேலாளர்களிடம், டாஸ்மாக் தெரிவித்துள்ளது.

