ADDED : ஜூலை 20, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் மதுக்கடைகளை மூடி, தமிழக மக்கள் மதுவால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலையை, ஏற்படுத்த வேண்டும். காரணம், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என, அனைத்து தரப்பினரும் மது பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், மதுபானத்தால் பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.
தற்போது விருதுநகர் மாவட்டத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து, மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில், அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இதற்கு காரணம் மதுபானம். இது தொடர்பாக, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் வருங்கால நல்வாழ்விற்கு வழிவகுக்க, மதுபானக் கடைகள் இல்லாத நிலை ஏற்பட வேண்டும்.
- வாசன்
தலைவர், த.மா.கா.,