ADDED : ஜூன் 20, 2026 04:12 AM
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பக்கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான பணி, 2016 - 21 இடையிலான அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கியது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், கேள்வி நேரம், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வழங்கும் பதில்கள் மட்டும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
எதிர்க்கட்சியினர் பேச்சு ஒளிபரப்பப்படாததால், எந்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கிறார் என்பது, மக்களுக்கு தெரியாத நிலை இருந்தது. த.வெ.க., ஆட்சி அமைந்ததும், சபை நிகழ்ச்சிகள் முழுமையாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் கவர்னர் உரை முழுமையாக நேரடி ஒளிபரப்ப செய்யப்பட்டது.
நேற்று சட்டசபையில், மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தில், முதல்வர், பல்வேறு சட்டசபை கட்சி தலைவர்கள் பேசியது, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், கவர்னர் உரை மீதான விவாதம், நேரடியாக ஒளிபரப்பப்படவில்லை.
