உள்ளாட்சி தேர்தலுக்கு "ஆலிவ் கிரீன்' ஓட்டுப்பெட்டி
உள்ளாட்சி தேர்தலுக்கு "ஆலிவ் கிரீன்' ஓட்டுப்பெட்டி
ADDED : ஆக 21, 2011 01:55 AM
தேனி : உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பெட்டிகளுக்கு வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
தமிழத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு அறிவித்துள்ளது. ஊராட்சிகளில் ஓட்டுச்சீட்டு முறை பயன்படுத்துவது உறுதியாகிவிட்டது. இதை தொடர்ந்து ஊராட்சிகளில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என நான்கு வகையான ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ஓட்டுச்சீட்டுகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு நிறத்தில் அச்சிடப்படும். முந்தைய உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பெட்டிகளை, வரும் தேர்தலிலும் பயன்படுத்த உள்ளனர். இதற்காக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சீட்டு பெட்டிகளை பழுது பார்த்து வர்ணம் பூசும் பணிகள் துவங்கி உள்ளன. பெட்டிகளில் 'ஆலிவ் கிரீன்' நிற பெயின்ட் அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.