உள்ளாட்சி ஓட்டுப்பெட்டி சீரமைப்புக்கு ஐந்து ரூபாய்
உள்ளாட்சி ஓட்டுப்பெட்டி சீரமைப்புக்கு ஐந்து ரூபாய்
ADDED : ஆக 07, 2011 01:52 AM
திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுப்பெட்டியை சீரமைக்க, ஐந்து ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை கொண்டு பராமரிப்பு பணி செய்ய முடியாது என, அதிருப்தி எழுந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல், இடஒதுக்கீடு பணிகள் முடிந்த நிலையில், ஓட்டுப்பெட்டி தயார் செய்யும் பணியில் ஒன்றிய நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை, ஒன்றிய அலுவலகங்களுக்கு எடுத்துச்செல்ல துவங்கிவிட்டனர். ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தாத பெட்டிகளை சீரமைக்க, ஐந்து ரூபாய் வீதம், மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதை கொண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய விலைவாசியில், இத்தொகையில் சீரமைப்பது சாத்தியமில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும்,' என, தேர்தல் ஆணைத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.