துரும்பு அளவும் தவறு செய்யாத பரிசுத்தமானவர் மோடி: ராமதாஸ் புகழாரம்
துரும்பு அளவும் தவறு செய்யாத பரிசுத்தமானவர் மோடி: ராமதாஸ் புகழாரம்
ADDED : ஏப் 09, 2024 04:02 PM

விழுப்புரம்: ''பிரதமர் மோடி துரும்பு அளவுக்கு கூட தவறு செய்யாதவர்; பரிசுத்தமானவர்'' என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் புகழ்ந்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்.,19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரத்தில் பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
இன்று உலகத்தில் உள்ள பல வல்லரசு நாட்டு தலைவர்கள் எல்லாம் ஒரு மனிதரை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். அவர்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி; அற்புதமான தலைவர்.
3வது முறையாக அவரை நீங்கள் (மக்கள்) பிரதமராக்க வேண்டும். ஒரு துரும்பு அளவுக்கு கூட பிரதமர் மோடி தவறு செய்யவில்லை; பரிசுத்தமானவர், அன்பிற்கு இலக்கணம் மோடிதான். எனவே அவரை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

