லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள்: தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள்: தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
ADDED : பிப் 23, 2024 11:53 AM

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னையில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் ஆலோசனை நடத்தினார். அதில், கலெக்டர்கள், போலீசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். துணை கமிஷனர் தர்மேந்திர சர்மா, நிதேஷ் நியாஸ், அஜய் ஆகியோரும் உடன் உள்ளனர். இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக,காங்கிரஸ், பாஜ, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் கருத்துகளை தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ராஜிவ் குமார் ஆலோசனை நடத்தினார். பல மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், மேலும் பல அதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாகவும் பங்கேற்றனர்.