வெற்றி நழுவினால், பதவியும் நழுவும்; முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!
வெற்றி நழுவினால், பதவியும் நழுவும்; முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!
UPDATED : ஜன 25, 2024 02:16 PM
ADDED : ஜன 25, 2024 02:14 PM

சென்னை: ‛‛வெற்றி நழுவினால், பதவியும் நழுவும்'' என அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலில் கட்சி தொண்டர்களையும், கூட்டணியையும் ஒருங்கிணைத்து வெற்றியை அறுவடை செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து தேர்தல் பணி செய்ய வேண்டும். வெற்றி நழுவினால், அமைச்சர் பதவியும் நழுவும். 40 தொகுதிகளிலும் வெற்றி முக்கியம்.
தீர்க்க முடியாத பிரச்னையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொகுதியில் இருக்கும் கட்சியின் சாதக மற்றும் பாதக அம்சங்கள் குறித்து, தேர்தல் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும். அமைச்சர்களின் மாவட்டம் மற்றும் பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு லோக்சபா தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.