'ரேஷனுக்கு நீண்ட வரிசை; மது விற்க கூடுதல் கவுன்டரா?'
'ரேஷனுக்கு நீண்ட வரிசை; மது விற்க கூடுதல் கவுன்டரா?'
ADDED : அக் 19, 2024 07:48 PM
சென்னை:தமிழகத்தில் 3500 டாஸ்மாக் மதுக்கடைகளில், இரண்டாவதாக விற்பனை கவுன்டர் திறக்க, அரசு முடிவு செய்துள்ளதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், 4,775 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அதில் அதிகம் மது விற்பனையாகும் 3,500க்கும் அதிகமான கடைகளில், இரண்டாவது விற்பனை கவுன்டரை, ஒரு வாரத்தில் திறக்க, டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ரேஷன் கடைகளில் நீண்ட விரிசையில் காத்திருந்து, மக்கள் பொருட்களை வாங்குகின்றனர். இதுபற்றி கவலைபடாத தி.மு.க., அரசு, மதுக்கடைகளில் ஒரு சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக்கூடாது என்று நினைத்து, கூடுதல் கவுன்டர்களை திறக்கிறது. அரசின் இந்த கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில், அரசு ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
***