உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 30, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
பா.ம.க., பொதுக்குழுவில், அன்புமணி பேசியதை கேட்டேன்; சிரிப்பு தான் வருகிறது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, அன்புமணி கேட்ட கேள்விக்கு, 'அணை கட்டுவதை கேட்பதற்கு, தமிழகத்திற்கு உரிமை கிடையாது' என, மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
எனவே, மத்திய அரசுக்கு, ராஜ்யசபாவில் நீங்கள் தரும் ஆதரவை திரும்பப் பெறுவீர்களா என கேட்டேன்.
ஏன் உங்களுக்கு பதற்றம் ஏற்படுகிறது. காங்., தனியாக நிற்க வேண்டும் என சொல்கிறீர்கள். காங்கிரஸ் குறித்து ஏன் பேசுகிறீர்கள். பா.ம.க., நான்கு எம்.எல்.ஏ.,க்களை பெற, அ.தி.மு.க., - பா.ஜ.,விடம் அடிபணிந்து நிற்கிறீர்கள்.
தேசிய அளவில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. முதலில் உங்கள் கட்சி வேலையை பாருங்கள். மேகதாது விவகாரத்தில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
- மாணிக்கம் தாகூர், தலைவர், தமிழக காங்.,
