வேல் என்பது ஆயுதம் அல்ல அறிவு: திருப்புகழ் மதிவண்ணன்
வேல் என்பது ஆயுதம் அல்ல அறிவு: திருப்புகழ் மதிவண்ணன்
UPDATED : ஆக 11, 2020 08:05 AM
ADDED : ஆக 11, 2020 08:03 AM

சென்னை : ''வேல் என்பது ஆயுதம் அல்ல அறிவை குறிப்பது'' என ஆன்மிக பேச்சாளர் திருப்புகழ் மதிவண்ணன் கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழ் மொழியின் சிறப்பு வேல். இலக்கணப்படி பார்க்கையில் முதல்நிலை நீண்ட தொழிற்பெயர். வேலுக்கு பூஜை செய்வது குறித்து சிலப்பதிகாரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு சாட்சியே தமிழ் பாடல்கள் தான். முதல் கடவுள் வணக்கமே திருமுருகாற்றுப்படை தான். பிறகு கந்தபுராணம் திருப்புகழ் கந்தசஷ்டி கவசம் என நீள்கிறது.
ஆயுதங்களிலேயே மனிதன் பெயர் வைக்க கூடிய ஒரே ஆயுதம் வேல் தான். அரிவாள் கத்தி சூலாயுதம் என்பதெல்லாம் பெயர்களில் இருக்காது. வெற்றி வேல் வைர வேல் வஜ்ரவேல் என வேல் பெயர் தாங்கிய மனிதர்கள் ஏராளம்.எனவே வேல் என்பது ஆயுதமல்ல... அறிவு. எனவே அனைவரும் அறிவு பெற்று விளங்க வேல் வணக்கம் செய்வோம்.இவ்வாறு கூறினார்.