ADDED : டிச 24, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் உள்ள சிவில் சப்ளைஸ் குடோனுக்கு திருநெல்வேலியில் இருந்து 25 டன் ரேஷன் அரிசி ஏற்றிய லாரி, கடந்த 16-ம் தேதி புறப்பட்டது.
லாரியை நித்திரவிளையைச் சேர்ந்த சுரேஷ் ஓட்டி வந்தார். ஆனால் இந்த லாரி இன்னமும் குடோனுக்கு வரவில்லை. அந்த லாரி மார்த்தாண்டம் வரை வந்தது தெரிந்தது.
அதன் பிறகே அந்த லாரி மாயமாகியுள்ளது. இதனால் கேரளாவுக்கு அந்த லாரியை கொண்டு சென்றிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.