வங்கக்கடலில் வந்தாச்சு காற்றழுத்த தாழ்வு பகுதி! தட்டித்தூக்க காத்திருக்கும் மழை
வங்கக்கடலில் வந்தாச்சு காற்றழுத்த தாழ்வு பகுதி! தட்டித்தூக்க காத்திருக்கும் மழை
UPDATED : நவ 11, 2024 06:23 PM
ADDED : நவ 11, 2024 06:21 PM

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, இன்று அதே இடத்தில நிலவி வருகிறது. அதன் எதிரொலியாக அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், வரக்கூடிய 2 நாட்களில் தமிழகம், இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.
இந் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வுப்பகுதி வரும் 2 நாட்களில் தமிழகம் நோக்கி நகரும். தாழ்வுப்பகுதியின் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நவ.15ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.