sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சினிபிட்ஸ் : நேரடியாக 'ஓடிடி'யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்

/

சினிபிட்ஸ் : நேரடியாக 'ஓடிடி'யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்

சினிபிட்ஸ் : நேரடியாக 'ஓடிடி'யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்

சினிபிட்ஸ் : நேரடியாக 'ஓடிடி'யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்


UPDATED : ஜூன் 18, 2025 10:13 AM

ADDED : ஜூன் 18, 2025 06:43 AM

Google News

UPDATED : ஜூன் 18, 2025 10:13 AM ADDED : ஜூன் 18, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நேரடியாக 'ஓடிடி'யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் ஆக., 27ல் வெளியாகிறது. அடுத்து 'அக்கா' என்ற வெப்சீரிஸில் நடிக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் சசி இயக்கத்தில் 'உப்பு கப்புரம்பு' என்ற படத்தில் நடித்துள்ளார். 1990களில் நடக்கும் கதையாக காமெடி கலந்த படமாக உருவாகி உள்ளது. இப்படம் தியேட்டர் வெளியீட்டிற்கு தான் தயாரானது. இப்போது சில காரணங்களால் நேரடியாக 'ஓடிடி' தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 4ல் வெளியிடுகின்றனர்.

ஜூன் 20ல் மும்முனைப் போட்டி

தமிழ் சினிமாவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இந்தவாரம் ஜூன் 20ல் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடித்துள்ள 'குபேரா' படமும், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் 'டிஎன்ஏ' படமும், வைபவ், அதுல்யா ரவி நடித்துள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படமும் வெளியாகின்றன. இவற்றில் தனுஷின் குபேரா படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி உள்ளார்.

சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் 'ரெட்ரோ' படம் மே 1ல் ரிலீஸானது. இந்த படம் வெளியான சமயத்தில் சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினர். இதுபற்றி கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில் ''பணம் பெற்று விமர்சனம் சொல்வதை விட, சிலர் பணம் பெற்று வெறுப்புடன் செயல்படுவது வேதனையாக இருக்கிறது. இதற்காகவே ஒரு அலுவலகம், குழு அமைத்து செயல்படுவதாக கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இது சினிமாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சிலர் மக்களை திரையரங்குகளுக்கு போகவிடாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதுகிறார்கள். நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான்'' என்றார்.

நடிகரான இயக்குனர் நெல்சன்

சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்க இருந்த வாடிவாசல் படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டது. இதனால் இப்பட தயாரிப்பாளர் தாணுவிற்கு சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இதற்கான பணிகள் துவங்கி படத்திற்கான அறிமுக வீடியோவிற்கான படப்பிடிப்பு நடக்கிறது. இதில் சிம்பு உடன் இயக்குனர் நெல்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதொடர்பான போட்டோ ஒன்று வைரலானது. இதன்மூலம் இயக்குனர் நெல்சன் முதன்முறையாக நடிகராக களமிறங்கி உள்ளார்.

நடிகர்கள் முகத்தை காட்டாமலே நடித்த படம்

புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத், ஐஸ்வர்யா நடிப்பில் கிருஷ்ண வேல் இயக்கி உள்ள படம் 'ஹும்'. இயக்குனர் கூறுகையில் ''நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லை. யாருடைய முகத்தையும் காட்டாமல் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த படத்தின் கதையை எழுதி வித்யாசமான முயற்சியாக இதை எடுத்துள்ளோம். பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு படமாக இருக்கும்'' என்றார்.

அரசியல் என்ட்ரி அனந்திகாவின் ஆசை

மலையாள நடிகையான அனந்திகா சனில்குமார் தமிழில் 'லால் சலாம், ரெய்டு' படங்களில் நடித்தார். தெலுங்கில் அவர் நடித்துள்ள '8 வசந்தலு' படம் ஜூன் 20ல் ரிலீஸாகிறது. அவர் கூறுகையில், ''சினிமாவில் நல்ல நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமா தாண்டி சட்டமும் படிக்கிறேன். எனக்கு அரசியல் ஆசை உண்டு. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறணும். பெண்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. அதேசமயம் இப்போது அரசியலுக்கு வர மாட்டேன். 40 வயதில் அரசியலில் பயணிக்க விரும்புகிறேன்'' என்கிறார்.






      Dinamalar
      Follow us