ADDED : டிச 09, 2025 07:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ஆங்கில புத்தாண்டை ஒட்டி, மதுரையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.
தனியார் பங்களிப்புடன், 'பாரத் கவுரவ்' சுற்றுலா ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புத்தாண்டு ரயில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில், மதுரையில் இருந்து, வரும் 27ம் தேதி புறப்பட்டு, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கோவா செல்கிறது.
மொத்தம், ஒன்பது நாட்கள் ரயில் சுற்றுலாவுக்கு, 'ஏசி' பெட்டியில் பயணிக்க, நபருக்கு, 29,950 ரூபாய் கட்டணம். 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கு, 20,500 ரூபாய் கட்டணம். 73058 58585 மொபைல் போன் எண் அல்லது www.tourtimes.in என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

