மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி 33 மாதங்களில் முடியும்
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி 33 மாதங்களில் முடியும்
ADDED : மார் 15, 2024 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் உருவாக உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளதாக கட்டுமான ஒப்பந்தம் பெற்றுள்ள எல் அன்ட் டி நிறுவனம் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான ஆணையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பெற்றுள்ளதாக எல் அண்ட் டி நிறுவனம் அறிவித்துள்ளது.
2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 720 படுக்கை கொண்ட மருத்துவமனை, 150 படுக்கைகளுடன் கூடிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு, 30 படுக்கைகள் உள்ள ஆயுஷ் பிரிவு, 150 இருக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லுாரி, செவிலியர் கல்லுாரி, 750 இருக்கைகள் கூடிய அரங்கம், தங்கும் விடுதி மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றை 33 மாதங்களில் கட்டி முடிக்க உள்ளதாக இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

