தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி துவங்கியது!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி துவங்கியது!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி துவங்கியது!


UPDATED : மார் 05, 2024 10:45 AM

ADDED : மார் 05, 2024 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2024 10:45 AM ADDED : மார் 05, 2024 10:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை இன்று(மார்ச் 05) வாஸ்து பூஜையுடன் எல் அண்ட் டி நிறுவனம் துவக்கியது.

மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி ரூ.1264 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டினார். கீழ் தளம், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை அமைய உள்ளது.

மொத்த தொகையில் 82 சதவீதம் ஜெய்க்கா நிறுவனம் கடனாக தருவதாகவும் மீதி 18 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சுற்றுச்சுவர் பணி முடிந்துள்ளது.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள எல் அண்ட் டி நிறுவனம் இன்று வாஸ்து பூஜையுடன் கட்டுமான பணிகளை துவக்கி உள்ளது. கட்டுமான பணிகளை 2026ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us