UPDATED : ஜன 09, 2024 08:38 PM
ADDED : ஜன 09, 2024 07:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை துணை மேயர் நாகராஜன் (மார்க்சிஸ்ட் கட்சி) வீடு மற்றும் அலுவலகத்தில் மர்ம நபர்கள் இருவர் ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலின் போது துணைமேயர் வீட்டில்இருந்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் கார் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர்.மர்மநபர்கள் தாக்குதல் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.மேலும் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.