மதுரை ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் சரவணகுமார் சி.பி.ஐ.,யால் கைது
மதுரை ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் சரவணகுமார் சி.பி.ஐ.,யால் கைது
ADDED : டிச 18, 2024 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: லஞ்ச புகாரில், மதுரை ஜி.எஸ்.டி துணை கமிஷனர் சரவணகுமாரை இன்று (டிச.,18) சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
மதுரையில் நேற்று லஞ்ச புகார் தொடர்பாக மத்திய கலால் வரித்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் ரூ 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது சி.பி.ஐ., அதிகாரிகள் இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், துணை கமிஷனர் சரவணகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், இன்று (டிச.,18) மதுரை ஜி.எஸ்.டி துணை கமிஷனர் சரவணகுமாரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அவரது வீட்டில் சி.பி.ஐ., டிஎஸ்பி தலைமையில் 5 பேர் சோதனை நடத்த வந்தனர். வீடு பூட்டப்பட்டு இருப்பதால் அதிகாரிகள் காத்து இருக்கின்றனர். வீட்டின் பூட்டு திறக்கப்பட்டதும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர்.