sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

/

நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு


UPDATED : ஜன 18, 2024 09:26 AM

ADDED : ஜன 17, 2024 07:16 AM

Google News

UPDATED : ஜன 18, 2024 09:26 AM ADDED : ஜன 17, 2024 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை இன்று(ஜன.,17) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கார் பரிசாக பெற்றார்.Image 1220298

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார். முன்னதாக, அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி, அதிகாரிகள், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். Image 1220301

90 பேர் கொண்ட மருத்துவக்குழு மற்றும் 70 பேர் அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களையும், காளைகளுக்கும் அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இறுதிகட்ட பரிசோதனை செய்தனர். மாவட்ட எஸ்.பி., டோங்கரே தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.Image 1220297

களத்தில் துள்ளி வரும் காளைகளை, இளைஞர்கள் அடக்கினர். சில காளைகள் சிக்கினாலும், பல காளைகள் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை. சிறப்பாக களமாடிய முதல் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு பைக் பரிசாக வழங்கப்பட்டது.Image 1220299

18 காளைகளை அடக்கிய வீரர்


மொத்தமாக நடந்து முடிந்த 10 சுற்றுகள் முடிவில் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்தார்; அவருக்கு பைக் பரிசு அளிக்கப்பட்டது. குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 13 காளைகளை அடக்கி 3ம் இடத்தை பிடித்தார்.

Image 1220341

தகுதி நீக்கம்


ஜல்லிக்கட்டில் 19 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 5 காளைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.

810 காளைகள்


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று மொத்தம் 810 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

83 பேர் காயம்

Image 1220295வீரர்கள் 31 பேர், காளை உரிமையாளர்கள் 18 பேர், பார்வையாளர்கள் 27 பேர், காவலர்கள் 6 பேர், ஆம்புலன்ஸ் உதவியாளர் ஒருவர் என 83 பேர் காயமடைந்தனர்.

மோதிரம் பரிசு!


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள், காளைகளுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உருவம் பொறித்த மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us