தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மஹா தீபம் ஆன்லைன் பதிவு சர்வர் கோளாறால் தவிப்பு

மஹா தீபம் ஆன்லைன் பதிவு சர்வர் கோளாறால் தவிப்பு

மஹா தீபம் ஆன்லைன் பதிவு சர்வர் கோளாறால் தவிப்பு


UPDATED : நவ 18, 2026 09:12 PM

ADDED : நவ 18, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 09:12 PM ADDED : நவ 18, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 15ல், கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விழா நடந்து வருகிறது. விழாவில், முக்கிய விழாவான, வரும், 24ல், கோவிலில் அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.

விழாவை காண, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலினுள் செல்ல 6,000 முதல், 7,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர். வழக்கமாக, கடந்த ஆண்டு வரை 1,600 பேர் இணைய தளம் வாயிலாக, 500 மற்றும், 600 ரூபாய் கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு முதன் முறையாக கட்டண தரிசன முறை நீக்கப்பட்டு, இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி, காலை, 4:00 மணிக்கு ஏற்றக்கூடிய பரணி தீபம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள், 500 பேர், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், 500 பேர், மஹா தீபத்திற்கு, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, 1,000 பேர், வெளி மாவட்டத்தை சேர்ந்த, 1,000 பேர் என மொத்தம், 3,000 பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கோவிலினுள் செல்ல விரும்பும் பக்தர்கள், http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், நேற்று காலை, 11:00 மணி முதல், நாளை, 20ம் தேதி மாலை, 3:00 மணி வரை பதிவு செய்பவர்கள், குலுக்கல் முறையில், 3,000 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மின்னணு நுழைவு சீட்டு வழங்கப்பட்டு கோவிலில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்கான முன்பதிவிற்காக நேற்று காலை பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால், சர்வர் கோளாறால் ஆன் லைன் பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்தனர். மாலை, 3:00 மணி வரை இந்த பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் சர்வர் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் பதிவை தொடங்கினர்.

இருப்பினும் இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், பக்தர்கள் அதிக அளவு பதிவு செய்ய கூடும் என்பதால், சர்வர் பழுது ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us