மகாளய அமாவாசை வழிபாடு; முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
மகாளய அமாவாசை வழிபாடு; முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
UPDATED : அக் 02, 2024 10:57 AM
ADDED : அக் 02, 2024 09:29 AM

சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை மற்றும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ஹிந்துக்கள் முன்னோர் ஆத்மா சாந்தியடைய ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் நீராடி திதி கொடுத்து தர்ப்பணம் செய்வார்கள். இன்று (அக்.02) மகாளய அமாவாசை என்பதால் ராமேஸ்வரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
* ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். ராமேஸ்வரம் கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் கூட்டம் தென்படுகிறது.
* சேலம் சுகவனேஸ்வரர் கோவில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில், பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
* திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், வேதாரண்யம், ஈரோடு கொடுமுடி, பவானி கூடுதுறை ஆகிய இடங்களிலும், கோயில்களிலும் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.