sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

/

மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

17


ADDED : ஜன 17, 2026 02:22 PM

Google News

ADDED : ஜன 17, 2026 02:22 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி, தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: பிரதமர் மோடி வரும் 23ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடியின் வருகை, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை உறுதி செய்யும். திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டமாக இந்த பொதுக்கூட்டம் இருக்கும்.

நேற்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். மும்பையில் மாநகராட்சி தேர்தலில் பாஜ ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று இருக்கிறது. மும்பை மட்டுமல்ல ஒட்டுமொத்த மஹாராஷ்டிராவிலும் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜ ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது. இந்தியாவின் தெற்கில் எடுத்துக் கொண்டால், முதல்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஒரு மிகப்பெரிய அளவிலான வெற்றியை பாஜ பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எம்ஜிஆர் பிறந்த தினம் இன்று. இந்தப் பிறந்த தினத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ் ஐந்து வாக்குறுதிகளை தமிழக வாக்காளர்களுக்கு கொடுத்து இருக்கிறார். அதனை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அதேபோல் இன்றைக்கு நமது மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி, தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நாளும், நேரமும் குறிக்கப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடியின் வருகைக்காக நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான வேலைகளை எல்லாம் நாங்கள் தொடங்கி செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.






      Dinamalar
      Follow us