ADDED : பிப் 14, 2024 02:29 AM
தமிழகம் முழுதும் மின்கழகம் சார்பில் 1949 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதம் தோறும் ஏதாவது ஒரு நாள் சுழற்சி முறையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். இதற்காக துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை செய்யப்படும். தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் பிளஸ் 2, பிளஸ் 1, 10 வகுப்பு அரசு முழு தேர்வு நடக்கிறது.
தேர்வுக்கு மாணவர்கள் படிக்க வேண்டும். தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் அனைத்து துணை மின் நிலையங்களிலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்கள் பராமரிப்பு பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் அவசர தேவையை பொறுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என மின்கழகம் சார்பில் துணை மின் நிலைய அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-நமது நிருபர்-

