தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கோவையில் பராமரிப்பு பணி 4 ரயில் சேவையில் மாற்றம்

கோவையில் பராமரிப்பு பணி 4 ரயில் சேவையில் மாற்றம்

கோவையில் பராமரிப்பு பணி 4 ரயில் சேவையில் மாற்றம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: கோவை ரயில்வே சந்திப்பில், பராமரிப்பு பணி மேற்கொள்வதால், அந்த வழியாக இயக்கப்படும், 4 ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (அக்.,6) புறப்படும், சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில், நாளை, (7ம் தேதி) இருகூர் – போத்தனுார் வழியே இயக்கப்படும். இது காலை, 9:45 மணிக்கு போத்தனுாரில் நின்று செல்லும். அதேபோல், நேற்று புறப்பட்ட தன்பாத் – போத்தனுார் அம்ரித் பாரத் விரைவு ரயில், நேற்று முன்தினம் புறப்பட்ட, திப்ருகர் – கன்னியாகுமரி விவேக் விரைவு ரயிலும், வரும் 7 ல், அதே தடத்தில் இயக்கப்பட உள்ளது. வரும், 7, 8 தேதிகளில் இயக்கப்படும் ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயில், 2 நாட்களிலும் அதே தடத்தில் இயக்கப்பட உள்ளது. இது, மதியம், 12:15 மணிக்கு போத்தனுாரில் நின்று செல்லும் என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us