சபா ராஜேந்திரனை 3வது முறையாக வெற்றி பெற செய்யுங்கள்: உதயநிதி
சபா ராஜேந்திரனை 3வது முறையாக வெற்றி பெற செய்யுங்கள்: உதயநிதி
ADDED : ஏப் 13, 2026 04:18 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் சபா ராஜேந்திரனை, 3 வது முறையாக எம்.எல்.ஏ., வாக வெற்றிபெற செய்யுங்கள் என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
நெய்வேலி இந்திரா நகரில் நேற்று இரவு துணை முதல்வர் உதயநிதி, தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நெய்வேலி தொகுதியில் சபா ராஜேந்திரன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை, கடலுாரில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அதையடுத்து, சபா ராஜேந்திரன் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்து வருகிறார். பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். சபா ராஜேந்திரன் உங்கள் வீட்டு பிள்ளை.
கடந்த 2 தேர்தல்களிலும் அவரை நீங்கள் வெற்றிபெற செய்தீர்கள். தற்போது மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக ஜெயிக்க வையுங்கள். கடந்த 10 ஆண்டு காலமாக அ.தி.மு.க., ஆட்சியில் தீர்க்க முடியாத பல பிரச்னையை தி.மு.க., ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றியவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நெய்வேலி தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்கள் செய்திருக்கிறார். கொள்கையிலும் செயல்பாடுகளிலும் உறுதியாக இருப்பார்.
எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். மே 4 ம் தேதி சபா ராஜேந்திரன் 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற நல்ல செய்தி எனக்கு வரவேண்டும்.
இவ்வாறு பேசினார்.
