உள்ளடக்கத்திற்கு செல்ல

தமிழிசை படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டவர் கைது
தமிழிசை படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டவர் கைது
ADDED : ஜூலை 09, 2026 12:23 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசையின் படத்தை, தவறாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பா.ஜ., சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக இருப்பவர் கிரி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், 'எங்கள் கட்சியின் மூத்த தலைவரும், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான தமிழிசையின் படத்தை, மர்ம நபர்கள் தவறாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
இது குறித்து, சென்னை மாநகர போலீசின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரை நேற்று கைது செய்தனர்.
