பிளஸ் 2 மாணவியை சென்னைக்கு அழைத்து சென்ற நபர் சிக்கினார்
பிளஸ் 2 மாணவியை சென்னைக்கு அழைத்து சென்ற நபர் சிக்கினார்
UPDATED : நவ 24, 2026 06:16 PM
ADDED : நவ 24, 2026 06:16 PM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை சேர்ந்த, பிளஸ் 2 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, சென்னைக்கு அழைத்து சென்ற கோபாலகிருஷ்ணன், 36, என்பவர் கைது செய்யப்பட்டார்.
நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சென்னையில் தனியார் நகைக்கடை ஒன்றில் பணிபுரிகிறார். மனைவியை பிரிந்து, எட்டு ஆண்டுகளாக வாழும் இவர், வலங்கைமான் அருகே, ஒரு கிராமத்தை சேர்ந்த, பிளஸ் 2 படிக்கும், 17 வயது இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி, சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இளம்பெண் பெற்றோர் புகாரின்படி வலங்கைமான் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதை அறிந்த கோபாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு, நெடுவாக்கோட்டையில் இளம்பெண்ணை கொண்டு வந்து விட்டுள்ளார்.
மீண்டும் சென்னை செல்ல, நீடாமங்கலம் பகுதியில் நின்ற கோபாலகிருஷ்ணனை, போலீசார் கைது செய்தனர்.
