ADDED : டிச 07, 2024 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வடகிழக்கு டில்லி சீலம்பூரில், குடும்பத் தகராறில் கணவனால் கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தப்பி ஓடிய கணவனை போலீசார் தேடுகின்றனர்.
சீலம்பூரில் வசிக்கும் ராஜ் கோஹ்லி, அவரது மனைவி முஸ்கான், 20, ஆகியோர் இடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரம் அடைந்த கோஹ்லி, மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்ததும் வீட்டில் இருந்து தப்பி ஓடினார்.
அக்கம் பக்கத்தினர், முஸ்கானை மீட்டு ஜெ.பி.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்து, ஜி.டி.பி., மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையில், தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய ராஜ் கோஹ்லியை தேடி வருகின்றனர்.