sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கலை நகரான மானாமதுரை கொலை நகரானது; போலீஸ் காவலில் இருந்த வாலிபர் பலியான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

/

கலை நகரான மானாமதுரை கொலை நகரானது; போலீஸ் காவலில் இருந்த வாலிபர் பலியான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கலை நகரான மானாமதுரை கொலை நகரானது; போலீஸ் காவலில் இருந்த வாலிபர் பலியான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கலை நகரான மானாமதுரை கொலை நகரானது; போலீஸ் காவலில் இருந்த வாலிபர் பலியான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

2


UPDATED : மார் 09, 2026 03:22 PM

ADDED : மார் 09, 2026 04:28 AM

Google News

UPDATED : மார் 09, 2026 03:22 PM ADDED : மார் 09, 2026 04:28 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இரண்டு இளைஞர்களை வாளால் வெட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்ற வாலிபர் மதுரை அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறலில் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர். அடித்துக் கொன்றதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கு சிபி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 6ல் மானாமதுரை சீயோன் நகரில் ஜீவா நகர் ஜெயக்குமார், ஆதனுார் அழகரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் 26, குணா அரிவாளால் வெட்டினர். இந்த வழக்கில் ஆகாஷ் டெலிசனை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது தப்பி ஓட முயற்சித்து கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது.

மதுரை அரசு மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை 12:30 மணிக்கு உயிரிழந்தார். போலீசார் அடித்ததால் தான் ஆகாஷ் டெலிசன் இறந்ததாக குற்றம் சாட்டிய உறவினர்கள், மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.காலை 10:30 மணிக்கு தொடங்கிய மறியல் மாலை வரை நீடித்தது.

வாலிபரை அடித்துக் கொலை செய்த போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பட்டியலின மக்கள் மீதான தாக்குதலை அரசு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

இதனால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சக்குடி, பார்த்திபனுார் வழியாக திருப்பிவிட்டன.

பதற்றம் காரண மாக மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களிடம் சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், தாசில்தார் கிருஷ்ணகுமார் பேச்சு வார்த்தை நடத்தினர். இரவிலும் மறியல் தொடர்ந்தது.

சிபிசிஐடிக்கு மாற்றம்


போலீஸ் விசாரணையில் இருந்த கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகாஷை அடித்துக் கொன்றதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கு சிபி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கழுத்தறுத்து டிரைவர் கொலை


மானாமதுரை உடை குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீஸ்வரன் 30, கழுத்தறுத்து கொல்லப்பட்டார். கொலையில் தொடர்புடைய இருவரை போலீசார் கைதுசெய்தனர்.



போலீசார் கூறியதாவது: செல்லம் என்பவரது வீட்டு மாடியில், அவரது மகன் சதீஷ்குமார் 38, நண்பர்கள் குருந்தன் குளம் கார்த்திகேயன் 37, ஆட்டோ டிரைவர் முனீஸ்வரன் மூவரும் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மது அருந்தியுள்ளனர். அப்போது சதீஷ்குமார் மனைவி குறித்து முனீஸ்வரன் தவறாக பேசியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், கார்த்திகேயன் இருவரும் மது பாட்டிலால் முனீஸ்வரனின் கழுத்தில் குத்தியுள்ளனர். இருவரையும் கைது செய்துள்ளோம் என்றனர். இதேபோல் இடைக்காட்டூரில் பட்டியலினத்தை சேர்ந்த 3 பேர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைதாகினர். மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கும் குற்ற சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us