உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 31, 2026 01:38 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, கர்நாடகா மாநிலம் மங்களூரு - சென்னை சென்ட்ரல் ரயில், 50 நிமிடங்கள் தாமதமாக வரும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
கேரள மாநிலம் பாலக்காடு கோட்டத்தில், பல்வேறு இடங்களில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மங்களூரு சென்ட்ரல் - சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில், வரும் 9, 16, 23, 30ம் தேதிகளில், 50 நிமிடங்களும், வரும் 6, 11, 13, 18, 20, 25, 27, செப்., 1, 3ம் தேதிகளில், 30 நிமிடங்களும் தாமதமாக வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
