சென்னையை கலக்கிய மனு பாகர்...! பள்ளி மாணவிகளுடன் சூப்பர் டான்ஸ்
சென்னையை கலக்கிய மனு பாகர்...! பள்ளி மாணவிகளுடன் சூப்பர் டான்ஸ்
UPDATED : ஆக 20, 2024 03:47 PM
ADDED : ஆக 20, 2024 01:48 PM

சென்னை: சென்னை வந்த ஒலிம்பிக் நாயகி மனு பாகர், பள்ளி மாணவிகளுடன் உற்சாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஒலிம்பிக் நாயகி
ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதித்துக் காட்டிய இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் இன்று சென்னை வந்தார். முகப்பேரில் உள்ள வேலம்மாள் நெக்சஸ் பள்ளியில் அவருக்கு இன்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ரோஜா மாலை
பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் பாராட்டு விழா தொடங்கியது. மனு பாகரின் வருகையால் உற்சாகம் அடைந்த பள்ளி மாணவர்கள் அவருக்கு ஆளுயர ரோஜா மாலையையும், தலையில் கிரீடம் ஒன்றையும் அணிவித்து கெத்தாக வரவேற்பு அளித்தனர். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மனு பாகர், அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
நடனம்
பின்னர் மேடையில் அவர் அமர்ந்திருக்கும் போது அங்கு இருந்த மாணவிகள் மனு பாகரை நடனமாட அழைத்தனர். அவர்களின் அழைப்பை சற்றும் மறுக்காமல் ஏற்றுக் கொண்ட அவரும் உற்சாகமாக சேர்ந்து நடமாடினார்.
நன்றி
எதிர்பாராத இந்த நிகழ்வை கண்டு, அங்கு கூடியிருந்த ஏராளமான மாணவர்கள் கைகளை தட்டி மகிழ்ந்தனர். மேடையில் அவருடன் டான்ஸ் ஆடிய மாணவிகளும் நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

