sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பல பட்டாசு ஆலைகள் எங்களிடம் அனுமதி பெறுவதில்லை: மா.க.வாரியம்

/

பல பட்டாசு ஆலைகள் எங்களிடம் அனுமதி பெறுவதில்லை: மா.க.வாரியம்

பல பட்டாசு ஆலைகள் எங்களிடம் அனுமதி பெறுவதில்லை: மா.க.வாரியம்

பல பட்டாசு ஆலைகள் எங்களிடம் அனுமதி பெறுவதில்லை: மா.க.வாரியம்

1


ADDED : செப் 24, 2024 04:35 AM

Google News

ADDED : செப் 24, 2024 04:35 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் பல பட்டாசு ஆலைகள் எங்களிடம் அனுமதி பெறுவதில்லை' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் இருந்த பட்டாசு ஆலையில், இந்தாண்டு பிப்ரவரி 17ல் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, இந்த வழக்கை சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வுக்கு மாற்றியது.

அதை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல அமர்வு, இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு, பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு அமைப்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், விருதுநகர் கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டது.

அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை:


விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில், 1,000த்திற்கும் அதிகமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சிவகாசி, வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ளன.

பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதால், அதிக ஆபத்து இல்லாத ரசாயனங்களை கொண்ட பசுமை பட்டாசுகளை தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி மற்றும் புத்தாண்டின் போது பட்டாசுகளை வெடிக்கவும், பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி, தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கண்காணித்து, மாசுபாட்டை குறைக்க வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பல பட்டாசு ஆலைகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறவில்லை.

பட்டாசு உற்பத்தி துவங்கிய பின்னரே, வாரியத்தின் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கின்றன. பட்டாசு ஆலைகளில் கழிவுநீர் உருவாக வாய்ப்பில்லை.

பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு அமைப்பு, தொழில் துறை பாதுகாப்பு, தமிழக அரசு, சுகாதார இயக்குனரகத்தின் அனுமதி பெற்று பட்டாசு ஆலைகள் இயங்குவதாலும், வர்த்தக கழிவுகள் இல்லாததாலும், சுற்றுச்சூழல் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்குமாறு, வாரியத்திடம் பட்டாசு ஆலைகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us