ADDED : பிப் 18, 2025 08:25 PM
கடந்த 2023ல், தமிழக காவல் துறை காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கியதில், பல்வேறு குழப்பங்கள், முறைகேடு நடந்திருப்பதாக, இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு பின் நீக்கப்பட்ட இளைஞர்கள், குற்றச்சாட்டுகின்றனர்.
இறுதி பட்டியலில் தேர்வு பெற்றவர்கள் குறித்த முழு விபரங்களையும் வெளியிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், 2024 அக்., 10ல், தேர்ச்சி பெற்றவர்களின் பெயர், பிறந்த தேதி, மதிப்பெண், சமூக பிரிவு உள்ளிட்ட, 15 விபரங்களையும் இறுதி பட்டியலில் வெளியிடுமாறும், அதுவரை ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், நான்கு மாதங்களாகியும் இன்று வரை, தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விபரங்கள் அடங்கிய இறுதி பட்டியல் வெளியிடப்படவில்லை. அரசு பணிகளுக்கான தேர்வுகளில், பல முறைகேடுகள் நடக்கின்றன. அதற்கு, காவல் துறை பணிகளும் விலக்கல்ல.
அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,

