மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள்; முதல்வர் ஸ்டாலின்
மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள்; முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜன 07, 2025 12:03 PM

சென்னை: செம்மொழி அந்தஸ்து, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டக்குடிநீர், சேது சமுத்திர திட்டங்கள் என ஏராளமான திட்டங்கள் மன்மோகன் காலத்தில் தமிழகத்திற்கு கிடைத்தன' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை காமராஜர் அரங்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., இளங்கோவன் படத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலக பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிக்கப்பட்டவர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங், இளங்கோவன் ஆகிய இருபெரும் தலைவர்களை அடுத்தடுத்து இழந்திருக்கிறோம். நாட்டுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் மட்டுமல்ல, எனக்கு தனிப்பட்ட இழப்புதான். நெருக்கடியான காலத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பிடித்தார் மன்மோகன் சிங்.
தமிழர்கள் அதிகளவில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது மன்மோகன் காலத்தில் தான். செம்மொழி அந்தஸ்து, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டக்குடிநீர், சேது சமுத்திர திட்டங்கள் என ஏராளமான திட்டங்கள் மன்மோகன் காலத்தில் தமிழகத்திற்கு கிடைத்தன. பல முக்கியத்துறைகளை தமிழர்களுக்கு கொடுத்தவர் மன்மோகன் சிங். பத்தாண்டுகள் மன்மோகன் சிங் அமைச்சரவை 21 தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தனர். மன்மோகன் சிங் மறைவு தமிழகத்திற்கு மிக மிக மிகப் பெரிய இழப்பு. தமிழகத்தின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

