தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மார் கழி வழிபாடு- 28

மார் கழி வழிபாடு- 28

மார் கழி வழிபாடு- 28


ADDED : ஜன 11, 2025 06:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 06:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பாவை - பாடல் 28


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்றன்னைபிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைசிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதேஇறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே!நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது.

உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

திருப்பள்ளியெழுச்சி - பாடல் 8


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!செந்தழல் புரை திருமேனியும் காட்டித்திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டிஅந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: என்னை ஆட்கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்த முதல்வன், எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us