sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார்கழி வழிபாடு

/

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு


ADDED : ஜன 02, 2024 06:45 PM

Google News

ADDED : ஜன 02, 2024 06:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவை - பாடல் 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்கந்தம் கமழும் குழலி கடை திறவாய்வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடசெந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்பவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

திருவெம்பாவை - பாடல் 18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலபெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிகண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடிபெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்

பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.






      Dinamalar
      Follow us