sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார்கழி வழிபாடு -06

/

மார்கழி வழிபாடு -06

மார்கழி வழிபாடு -06

மார்கழி வழிபாடு -06


ADDED : டிச 20, 2024 07:13 PM

Google News

ADDED : டிச 20, 2024 07:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவை - பாடல் 6


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அன்புத் தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பதுபோல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் 'ஹரி ஹரி' என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

திருவெம்பாவை - பாடல் 6


மானே நீ நென்னலை நாளை வந்து உங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறவே அறிவரியான்தானே வந்து எம்மைத் தலையளித்துஆட்கொண்டருளும்வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், 'உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன்' என்றாய். ஆனால்,நாங்கள் வந்து உன்னை எழுப்பும் படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர்களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.






      Dinamalar
      Follow us