sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார்கழி வழிபாடு -07

/

மார்கழி வழிபாடு -07

மார்கழி வழிபாடு -07

மார்கழி வழிபாடு -07


ADDED : டிச 21, 2024 06:42 PM

Google News

ADDED : டிச 21, 2024 06:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்கழி வழிபாடு -07


திருப்பாவை - பாடல் 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்

பொருள் அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

திருவெம்பாவை - பாடல் 7


அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த துாக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே “சிவசிவ'என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.

இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு துாரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த துாக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா?.






      Dinamalar
      Follow us