sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார்கழி வழிபாடு : திருப்பாவை -திருவெம்பாவை ;பாடல் 1

/

மார்கழி வழிபாடு : திருப்பாவை -திருவெம்பாவை ;பாடல் 1

மார்கழி வழிபாடு : திருப்பாவை -திருவெம்பாவை ;பாடல் 1

மார்கழி வழிபாடு : திருப்பாவை -திருவெம்பாவை ;பாடல் 1


ADDED : டிச 15, 2024 07:04 PM

Google News

ADDED : டிச 15, 2024 07:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்கழி வழிபாடு


திருப்பாவை - பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்புமிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளிவீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரியநிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தை உடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

திருவெம்பாவை - பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்துபோதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னேஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

பொருள்:

வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவபெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின்சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!.






      Dinamalar
      Follow us