sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார்கழி வழிபாடு

/

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு


ADDED : ஜன 06, 2024 07:07 PM

Google News

ADDED : ஜன 06, 2024 07:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவை - பாடல் 22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போலசெங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ?திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

பொருள்: கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களை பார்ப்பாயானால்,எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!.

திருப்பள்ளியெழுச்சி - பாடல் 2

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்கருணையின் சூரியன் எழவெழ நயனக்கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்திருப்பெருந் துறையுறை சிவபெருமானேஅருள்நிதி தரவரும் ஆனந்த மலையேஅலைகடலே பள்ளி எழுந்தருளாயே

பொருள் திருப்பெருந்துறை சிவபெருமானே! சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கே வந்து விட்டான் (இந்திரனின் திசை கிழக்கு). உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட்டன. வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றன. அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம் தருபவனே! அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக.






      Dinamalar
      Follow us