உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 26, 2026 07:21 PM

அ நிறம் | அளவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், சார் – பதிவாளரை கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், ‘ஸ்பெஷல் கிளாஸ்’ எடுக்கும் நுாதன போராட்டம் நடந்தது.
ஆலங்குடியில் சார் – பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு வருபவர்களை ஒருமையில் பேசி, மரியாதை குறைவாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
த.வா.க.,வின் மாநில இளைஞரணி செயலர் நியாஸ் தலைமையில் இன்று (நவ.,26), சார் – பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சார் – பதிவாளர் மற்றும் பணியாளர்களுக்கு மரியாதையை கற்றுக் கொடுக்கும் வகையில், திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவற்றை வாசித்து, ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
