மவுலா அலி --- கொல்லம் சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்
மவுலா அலி --- கொல்லம் சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்
ADDED : டிச 09, 2024 12:28 AM

விருதுநகர்; சபரிமலை பக்தர்களுக்காக மவுலா அலி -- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் டிச. 11 முதல் இயக்கப்படவுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த ஆண்டும் அதிக அளவிலான பக்தர்கள் வருவர் என்பதால் மவுலா அலியில் இருந்து கொல்லத்திற்கு (07193) சிறப்பு ரயில் டிச. 11 முதல் 25 வரை புதன் கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் (07194) டிச. 13 முதல் 27 வரை செல்கிறது.
இந்த ரயில் மவுலா அலியில் இருந்து மாலை 6:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11:55 மணிக்கு கொல்லம் வந்தடையும். மறுமார்க்கத்தில் வெள்ளி கிழமைகளில் அதிகாலை 2:30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9:15 மணிக்கு மவுலா அலி செல்லும்.
மேலும் மவுலா அலியில் இருந்து (07193) சிறப்பு ரயில் டிச. 14 முதல் டிச. 28 வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் (07150) டிச. 16 முதல் டிச. 30 வரை செல்கிறது.
இந்த ரயில் மவுலா அலியில் இருந்து அன்று மாலை 6:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10:30 மணிக்கு கொல்லம் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் திங்கள் கிழமைகளில் அதிகாலை 2:30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9:50 மணிக்கு மவுலா அலி செல்கிறது.
செர்லபள்ளி, நல்கொண்டா, மிரியாலகுடா, நதிகுடே, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், நெல்லுார், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கனுார், காயங்குளம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.