ADDED : அக் 09, 2025 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மே க்ஸ் லைப் பென்ஷன் பண்டு' நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழை, பி.எப்.ஆர்.டி.ஏ., எனும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.
கடந்த 2024, டிச., 31ம் தேதி, மேக்ஸ் லைப் நிறுவனம் அனுப்பிய கோரிக்கையை ஏற்று, பென்ஷன் பண்டு பதிவுச்சான்றிதழை ரத்து செய்தது, கடந்த ஜூன் 2 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், மேக்ஸ் லைப் பென்ஷன் பண்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், சுய தேர்வு அடிப்படையில் பிற பென்ஷன் பண்டு மேலாண்மை நிறுவனத்துக்கு மாற்றி கொள்ளலாம் என, பி.எப்.ஆர்.டி.ஏ., தெரிவித்துள்ளது.