sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ

/

ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ

ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ

ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ

55


UPDATED : ஏப் 19, 2025 01:01 PM

ADDED : ஏப் 19, 2025 11:55 AM

Google News

UPDATED : ஏப் 19, 2025 01:01 PM ADDED : ஏப் 19, 2025 11:55 AM

55


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ம.தி.மு.க.,வின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து வைகோ மகனும், திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ விலகினார்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை, கட்சியின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முக்கிய மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், கட்சியில் இருந்து வெளியேறினர்.

அப்போது கட்சி துணை பொதுச்செயலர் மல்லை சத்யா வெளியேறாமல், கட்சியிலேயே இருந்தார். கட்சியின் முன்னணி நிர்வாகியாக தற்போதும் அவர் இருக்கிறார்.இந்நிலையில், கட்சியில் அதிகார மையமாக உருவெடுத்த துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதல் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், ம.தி.மு.க.,வின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து வைகோ மகனும், திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ விலகினார்.

அவரது அறிக்கை:


அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018ம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன்.

வைகோவுக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர்,ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. கட்சி தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன்.

கொரோனா காலத்தில் மீண்டும் வைகோ உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அப்போது தான் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை.

நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், இயக்கத் தந்தை வைகோவுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன். சட்டசபை தேர்தல் வந்த போது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும்.

அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சியினரும், சாத்தூர் தொகுதி மக்களும் , அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன்.

ம.தி.மு.க., தமிழக அரசியலில் வலிவும், பொலிவும் பெற வேண்டும் என அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன்.

இத்தகைய சூழ்நிலையில், தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர்.

நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் 4 ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை. எனவே கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். நாளை 20ம் தேதி நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வேன். ம.தி.மு.க.,வின் தொண்டனாக கடைசி வரை இருப்பேன். இவ்வாறு துரை வைகோ கூறியுள்ளார்.

மல்லை சத்யா கருத்து

ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா கூறியதாவது: துரை வைகோ முடிவு குறித்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பதில் அளிப்பார். நாளை நடைபெறும் ம.தி.மு.க., நிர்வாக குழு கூட்டத்தில் நான் பங்கேற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.



அதிர்ச்சி அளிக்கிறது


இது குறித்து ம.தி.மு.க., தலைவர் வைகோ அளித்த பேட்டி: துரை வைகோவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. தொலைக்காட்சியை பார்த்து தான் துரை வைகோ விலகல் முடிவை தெரிந்து கொண்டேன், என்றார்.






      Dinamalar
      Follow us