தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்: 80,000 பேர் பயன்
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்: 80,000 பேர் பயன்
ADDED : அக் 09, 2025 02:50 AM
சென்னை:''தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில், கிராமங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் வாயிலாக, 80,000 பேர் பயனடைந்துள்ளனர்,'' என, பல்கலை வேந்தர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலை வேந்தர் சீனிவாசனின் 80வது பிறந்த நாள் விழா, பெரம்பலுாரில் உள்ள பல்கலை வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், துணை தலைவர் ஜான் அசோக், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனத் தலைவர் சிவசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்று, சீனிவாசனுக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் படிக்கும், 12 மாணவ, மாணவியருக்கு, பல்கலை வேந்தர் சீனிவாசன், கல்வி உதவித் தொகையாக, 8.50 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி வாழ்த்தினார்.
கல்வி நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய 42 பேருக்கு, 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். அவரது பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
விழாவில், சீனிவாசன் பேசியதாவது:
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை வாயிலாக கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில், 80,000க்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இன்று, நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால், அதற்கு, உழைப்பு, ஒழுக்கம், உறுதி மற்றும் உயர்வை நோக்கிய எண்ணமே காரணம். நம்பிக்கையுடன், கனவுகளை உண்மையாக்க, கடினமாக உழைத்தால், ஒரு நாள் சமூகத்தின் ஒளிக்கதிர்களாக, எல்லோரும் விளங்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வி ழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் கதிரவன், பல்கலை இணைவேந்தர் அனந்தலட்சுமி, நிர்வாக இயக்குநர்கள் நிர்மல், நீவாணி, நகுலன், செயலர் நீல்ராஜ் உட்பட ப லர் பங்கேற்றனர்.