ADDED : ஆக 15, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மருத்துவ கல்லுாரிகள் தேர்வு செய்ய, கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான ஒதுக்கீடு இடங்கள் குறித்த பட்டியல், வரும் 18ல் வெளியிடப்பட உள்ளன.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, சிறப்பு மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.
தொடர்ந்து, பொதுப் பிரிவு கலந்தாய்வு 'ஆன்லைன்' முறையில் நடந்தது. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், மாநில கலந்தாய்வில், கல்லுாரிகளை தேர்வு செய்ய, மூன்று முறை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, கல்லுாரிகளை தேர்வு செய்ய, இன்று கடைசி நாள். இதற்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்பட்டு, வரும் 18ம் தேதி இடங்கள் ஒதுக்கீடுக்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது.