sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருத்துவம் சார் பட்டப்படிப்புகள் முதல் கட்ட கவுன்சிலிங் நாளை முடிவு

/

மருத்துவம் சார் பட்டப்படிப்புகள் முதல் கட்ட கவுன்சிலிங் நாளை முடிவு

மருத்துவம் சார் பட்டப்படிப்புகள் முதல் கட்ட கவுன்சிலிங் நாளை முடிவு

மருத்துவம் சார் பட்டப்படிப்புகள் முதல் கட்ட கவுன்சிலிங் நாளை முடிவு


ADDED : ஜூலை 24, 2011 02:29 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங்கில், அரசு மருத்துவ கல்லூரிகளில், இப்படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன.

இரண்டாம்கட்ட கவுன்சிலிங், அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் நடக்கும் என தெரிகிறது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப்படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 28ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.பி.டி., உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் கடந்த 19ம் தேதி துவங்கியது. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடந்துவரும் இக்கவுன்சிலிங், நாளையுடன் முடிகிறது. இதில், மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுவதும் நிரப்பப்பட்டுவிட்டன.

'மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்களுக்கு, இரண்டாம்கட்ட கவுன்சிலிங், அடுத்த மாதம் இரண்டாம் வாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்' என, கூடுதல் மருத்துவ கல்வி இயக்குனர் ஷீலா கூறினார்.








      Dinamalar
      Follow us