ADDED : அக் 19, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக கவர்னர் ரவி, 72, பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வயது முதிர்வின் காரணமாக சில உடல்நல பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று, மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதுடன், தேவையான சிகிச்சைகளை பெற்று வருகிறார்.
அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு, நேற்று காலை 10:30 மணியளவில் கவர்னர் ரவி சென்றார். அங்கு உரிய பரிசோதனைகள் செய்த பின், மருத்துவர்கள் ஆலோசனை பெற்று, ராஜ்பவன் திரும்பினார். வழக்கமான பரிசோதனைக்கு அவர் வந்து சென்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.